ரயில் பயணி சுட்டுக்கொலை; தலைமறைவான சிஆர்பிஎப் வீரர் 18 ஆண்டுகளுக்கு பின் கைது

 

ரயில் பயணி சுட்டுக்கொலை;  தலைமறைவான சிஆர்பிஎப் வீரர் 18 ஆண்டுகளுக்கு பின்  கைது

திருவள்ளூர்

ரயிலில் இடம்தர மறுத்த பயணியை சுட்டுகொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த சிஆர்பிஎப் தலைமை காவலரை 18 ஆண்டுகளுக்கு பின், திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைதுசெய்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த சிஆர்பிஎப் தலைமை காவலர் அத்தூல்சந்திர தாஸ். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கோவைக்கு சேரன் விரைவு ரயிலில் சென்றபோது, இருக்கையில் அமர்வது தொடர்பாக, நாமக்கல்லை சேர்ந்த ராஜா என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

ரயில் பயணி சுட்டுக்கொலை;  தலைமறைவான சிஆர்பிஎப் வீரர் 18 ஆண்டுகளுக்கு பின்  கைது

இதில் ஆத்திரமடைந்த அத்தூல் சந்திர தாஸ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் ரயில்வே போலீசார், அத்தூல்சந்திர தாஸை கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்த நிலையில், அவர் ஜாமினில் வெளியே வந்தார். தொடர்ந்து, கடந்த 2002 ஆம் ஆண்டு வழக்கு திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத அவர் திடீரெ தலைமறைவானார்.

ரயில் பயணி சுட்டுக்கொலை;  தலைமறைவான சிஆர்பிஎப் வீரர் 18 ஆண்டுகளுக்கு பின்  கைது

இதனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி,., அரவிந்தன் உத்திரவின் பேரில், டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார், அத்தூல் சந்திரதாஸை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சைபர் கிரைம் போலீசாரின் உதவியினால் அசாமில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார், அவரை கடந்த 21ஆம் தேதி கைதுசெய்து, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.