‘1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

‘1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

கற்றல் – கற்பித்தல் இடைவெளி இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுப்பது என தமிழக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இருப்பினும் ஆன்லைன் வகுப்பினால் மாணவர்களின் கற்றல் திறனில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்ல. சொல்லப்போனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைய தொடங்கியுள்ளது.

‘1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

இந்நிலையில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் Assignments வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கற்றல் – கற்பித்தல் இடைவெளி இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதை நிவர்த்தி செய்யவே Assignment வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குபடைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், கிரீட்டிங் கார்டு தயாரித்தல், படம் வரைதலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற Assignments களும் தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.