சட்டமன்ற தேர்தல் : மதுரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல் ஹாசன்

 

சட்டமன்ற தேர்தல் : மதுரையில்  இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்குகிறார்.

சட்டமன்ற தேர்தல் : மதுரையில்  இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல் ஹாசன்

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார். முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 13ஆம் தேதியான இன்று மதுரையில் கமல் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் : மதுரையில்  இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல் ஹாசன்

தொடர்ந்து 14, 15, 16 தேதிகளில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தனது தேர்தல் பரப்புரை நிகழ்த்த உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் கமல் ஹாசன் அவனியாபுரம், கீழ வாசல் மற்றும் பசுமலை உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்கிறார்.