சட்டமன்ற தேர்தல்: திமுக இன்று முதல் விருப்ப மனு!

 

சட்டமன்ற தேர்தல்: திமுக இன்று முதல் விருப்ப மனு!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெறப்படுகின்றன.

சட்டமன்ற தேர்தல்: திமுக இன்று முதல் விருப்ப மனு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக – அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், தேர்தலில் களம் காணுவதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம். அண்ணா அறிவாலயத்தில் ரூ.1000 செலுத்தி திமுகவினர் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். இன்று முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை திமுகவினர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்: திமுக இன்று முதல் விருப்ப மனு!

திமுகவில் தமிழகம் புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதி விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 25 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுகவில் மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு ரூபாய் 15 ஆயிரம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தோழமை கட்சிகளுக்கான தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்து இருந்தால் கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.