சட்டமன்றத் தேர்தல் : தேர்தல் ஆணையம் 2ம் நாளாக ஆலோசனை!

 

சட்டமன்றத் தேர்தல் : தேர்தல் ஆணையம் 2ம் நாளாக ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை நடத்துகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிய நிலையில், தமிழக தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குச் சாவடி, வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் : தேர்தல் ஆணையம் 2ம் நாளாக ஆலோசனை!

இது தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு, நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த குழு முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தலை எத்தனை கட்டமாக நடத்துவது? தேர்தல் தேதியை எப்போது அறிவிப்பது? தபால் வாக்கு முறை அமல்படுத்துவதா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது, தமிழ் புத்தாண்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரோ அல்லது பிறகோ தேர்தல் நடத்த வேண்டாம் என பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் : தேர்தல் ஆணையம் 2ம் நாளாக ஆலோசனை!

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2ம் நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கடலோர காவல் படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பங்கேற்றுள்ளார்.