பாஜக கேட்டதோ 40, அதிமுக கொடுத்ததோ 25! கூட்டணியில் அதிருப்தியா?

 

பாஜக கேட்டதோ 40, அதிமுக கொடுத்ததோ 25! கூட்டணியில் அதிருப்தியா?

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு அதிமுக -பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் நேற்றுமுன் தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டிருந்தனர் ஆலோசனையில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதை மாநில பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுத்துக் கொள்ளும்படி அமித்ஷா அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கேட்டதோ 40, அதிமுக கொடுத்ததோ 25! கூட்டணியில் அதிருப்தியா?

அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதை அந்தந்த கட்சிகள் அமைத்துள்ள குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுத்துக் கொள்வதாக அதிமுக தலைமை அமித்ஷாவுடன் தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தரப்பில் இருந்து 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், 25 தொகுதிகள் வரை கொடுக்கிறோம் என அதிமுக தரப்பிலிருந்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.