5 மாநிலங்களில் தேர்தல்… இப்போதைய வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

 

5 மாநிலங்களில் தேர்தல்… இப்போதைய வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

தமிழ்நாடு மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றன. மேற்கு வங்கத்தைத் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களுக்கும் இன்றோடு தேர்தல் முடிவடைகின்றன. அசாம் மாநிலத்திலும் மேற்கு வங்கத்திலும் 3ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று மட்டும் மொத்தமாக 475 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

People queue to cast their vote amid Corona virus pandemic at South 24 parganas district in West Bengal.(Photo by Sameer Jana)

வழக்கத்தைப் போல அல்லாமல் இடைவேளையே இன்றி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. அதேபோல கொரோனா பரவலால் முதன் முறையாக சுகாதாரப் பணியாளர்களைக் களமிறக்கியுள்ளது. காலை 10 மணி நிலவரப்படி கேரளாவில் 15.33%, தமிழ்நாடு, புதுச்சேரியில் 6.58%, மேற்குவங்கத்தில் 14.62%, அசாமில் 12.83% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பின் இன்று அதிக தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.