‘அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!

 

‘அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!

மது அருந்துவதில் எந்த மாநில பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள் என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வளர்ச்சி அடைந்து வரும் நாடு என கூறப்படும் இந்தியாவில் பாலியல் தொந்தரவு, வன்கொடுமை, போதைப் பொருள் உள்ளிட்ட பல தீங்குச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மது பழக்கத்தால் ஏற்படும் சண்டைகளும் பிரச்னைகளும் அதிகமாக இருக்கிறது என்றே கூறலாம். ஆண்கள் மட்டும் அல்லது அவர்களுக்கு சரி சமமாக பெண்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்பதே உண்மை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!

இந்த நிலையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் பெண்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள் என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், 2019-20 ஆம் ஆண்டை பொறுத்தவரை அசாமில் 26.3%, 15 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் பிற மாநிலங்களில் 10%க்கும் குறைவான பெண்களே மது அருந்துகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!

கடந்த 2005- 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், அசாமில் 7.5% பெண்கள் மட்டுமே மது அருந்தி வந்த நிலையில், அந்த விகிதம் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த ஆய்வின் போது அருணாச்சல பிரதேசத்தில் 33%, சிக்கீமில் 19%, சத்தீஸ்கரில் 11.4% பெண்கள் மது அருந்தி வந்ததாக தெரிய வந்துள்ளது. அசாமில் பெண்கள் மட்டும் அல்லாது, 35.6% ஆண்களும் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளனர்.

‘அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!

வளர்ச்சி அடையும் நாடான இந்தியாவில், பெரும்பாலானோர் மது போதைக்கு அடிமையாகி இருப்பது பெரும் கவலைக்குரிய ஒன்று என்றும் இது நாட்டின் வளர்ச்சியை தடை செய்யும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க இந்தியாவில் பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் கொரோனா காலத்தில் மட்டும் 13,244 பாலியல் புகார்கள் பதிவாகி இருக்கிறது என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.