அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை!

 

அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை!

அசாம்

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவியது.

அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை!

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும்கட்சியாக பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.

தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 69 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பிராந்திய கட்சிகள் 1 இடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன.