பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு மோடியும், அமித் ஷாவும் பொறுப்பு… ஓவைசி

 

பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு மோடியும், அமித் ஷாவும் பொறுப்பு… ஓவைசி

பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு மோடியும், அமித் ஷாவும் தான் பொறுப்பு என்று பா.ஜ.க.வுக்கு அசாதுதீன் பதிலடி கொடுத்துள்ளார்.

தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய் குமார் கடந்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழைய நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி ஹைதராபாத்திலிருந்து சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருக்கும் ரோஹிங்கியர்களை வெளியேற்றுவோம். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்கியாவிலிருந்து வாக்காளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு மோடியும், அமித் ஷாவும் பொறுப்பு… ஓவைசி
அசாதுதீன் ஓவைசி

பா.ஜ.க. தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தான் பொறுப்பு. ஏனென்றால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தானியர்கள் இங்கே நுழைந்ததால் அது அவர்களின் தோல்வி.

பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு மோடியும், அமித் ஷாவும் பொறுப்பு… ஓவைசி
பா.ஜ.க.

நான் அவர்களை (பாகிஸ்தானியர்கள்) இங்கு பார்த்தது இல்லை. இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே வெறுப்பு சுவரை உருவாக்க அவர்கள் (பா.ஜ.க.) விரும்புகின்றனர். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடியை பா.ஜ.க. அழைத்து வரட்டும் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். டெல்லியிலிருந்து வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் என்னை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இவை மாநகராட்சி தேர்தல்கள், அவர்கள் வளர்ச்சி குறித்து பேச மாட்டார்கள் ஹைதராபாத் வளர்ச்சி அடைந்த நகரமாக மாறியுள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. ஹைதராபாத்தின் பிராண்ட் பெயரை வீழத்துவதன் மூலம் அவற்றை அழிக்க பா.ஜ.க. விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.