“ஆத்திரத்தில் கத்திய தந்தை ,அருவாளால் குத்திய மகன்” -பப்ஜி விளையாட்டால் வந்த வினை

 

“ஆத்திரத்தில் கத்திய தந்தை ,அருவாளால் குத்திய மகன்” -பப்ஜி விளையாட்டால் வந்த வினை

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான ஒரு மகனை அவரின் தந்தை கண்டித்ததால் கோபமுற்ற மகன் அவரை கத்தியால் குத்தி ,தன்னையும் குத்திக்கொண்ட சம்பவம் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

“ஆத்திரத்தில் கத்திய தந்தை ,அருவாளால் குத்திய மகன்” -பப்ஜி விளையாட்டால் வந்த வினை

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் அமீர் என்ற 18 வயது சிறுவன் சீன நாட்டு செல்போன் விளையாட்டான பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்தான் .இந்திய அரசு அந்த விளையாட்டை தடை செய்திருந்தாலும் பலர் அதை ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர் .இப்படி பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான அந்த சிறுவனை அவரின் தந்தை கண்டித்துள்ளார் .ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் அமீர் பல மணி நேரம் அந்த கேம் தொடர்ந்து விளையாடி வந்தார் .
இதனால் அவரின் தந்தை இர்பான் கோபத்தில் கத்தி அவரை திட்டியுள்ளார் .அந்த வாலிபர் ஏற்கனவே போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார் .பிறகு அந்த போதை பழக்கத்தை நிறுத்த சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார் .இந்நிலையில் அவரின் தந்தை மகனை கண்டித்ததால் கடுமையான கோபமுற்ற அவரின் மகன் அருகிலிருந்த ஒரு கொடுவாளை எடுத்து அவரை குத்தியுள்ளார் .இதனால் ரத்த வெள்ளத்தில் அவரின் தந்தை அங்கேயே மயங்கி விழுந்தார் . .பிறகு அதே கொடுவாளை எடுத்து தன்னையும் குத்திக்கொண்டார் .இதனால் ரத்தவெள்ளத்தில் அவர் வீதியில் ஓடினார் .அப்போது ஊர்மக்கள் அவரை தடுத்து நிறுத்தியபோது அவர்களையும் குத்திவிடுவதாக மிரட்டினார் .இதனால பொது மக்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்தார்கள் .பிறகு மருத்துவமனையில் தந்தை மகன் இருவரையும் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள் .அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்ட்டு வருகிறது.

“ஆத்திரத்தில் கத்திய தந்தை ,அருவாளால் குத்திய மகன்” -பப்ஜி விளையாட்டால் வந்த வினை