கை கொடுத்த பண்டிகைகள்…. லாபமாக ரூ.1,238 கோடி அள்ளிய ஏசியன் பெயிண்ட்ஸ்

 

கை கொடுத்த பண்டிகைகள்…. லாபமாக ரூ.1,238 கோடி அள்ளிய ஏசியன் பெயிண்ட்ஸ்

2020 டிசம்பர் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,238.3 கோடி ஈட்டியுள்ளது.

அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,238.3 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 62 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் லாபமாக ரூ. 764.4 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

கை கொடுத்த பண்டிகைகள்…. லாபமாக ரூ.1,238 கோடி அள்ளிய ஏசியன் பெயிண்ட்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ்

2020 டிசம்பர் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாயாக ரூ.6,788.5 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 25.2 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாயாக ரூ.5,420.3 கோடி மட்டுமே சம்பாதித்து இருந்தது.

கை கொடுத்த பண்டிகைகள்…. லாபமாக ரூ.1,238 கோடி அள்ளிய ஏசியன் பெயிண்ட்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ்

பண்டிகை கால தேவை அதிகரிப்பு மற்றும் சிறப்பான செயல்திறன் போன்ற காரணங்களால் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலை 39 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 காலண்டர் ஆண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் 26 பெயிண்ட் உற்பத்தி ஆலைகளுடன் 15 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.