எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக லாபத்தை ஈட்டிய ஏசியன் பெயிண்ட்ஸ்..

 

எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக லாபத்தை ஈட்டிய ஏசியன் பெயிண்ட்ஸ்..

அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.218.45 கோடி ஈட்டியுள்ளது. இது நிபுணர்களின் மதிப்பீட்டை காட்டிலும் அதிகமாகும். அதேசமயம் சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 66.7 சதவீதம் குறைவாகும்.

எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக லாபத்தை ஈட்டிய ஏசியன் பெயிண்ட்ஸ்..

2020 ஜூன் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 42.7 சதவீதம் குறைந்து ரூ.2,922.6 கோடியாக சரிவடைந்துள்ளது. இதில் பெயிண்ட் வாயிலான வருவாய் 42.6 சதவீதம் குறைந்து ரூ.2,871 கோடியாக குறைந்துள்ளது. முன்னதாக நிபுணர்கள் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.27 கோடி, வருவாய் ரூ.2,050 கோடி என்ற அளவில்தான் இருக்கும் என கணித்து இருந்தனர். ஆனால் நிபுணர்களின் மதிப்பீடுகளை காட்டிலும் அந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக லாபத்தை ஈட்டிய ஏசியன் பெயிண்ட்ஸ்..

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல்அதிகாரி அமித் சிங்கிள் கூறுகையில், மூலப் பொருட்கள் விலை குறைவாக இருந்தது, பல்வேறு செலவு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டது போன்ற காரணங்களால் வணிகம் முழுவதும் இலாபத்தன்மை இருந்தது என தெரிவித்தார்.