ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 81 சதவீதம் அதிகரிப்பு… இறுதி டிவிடெண்ட் ரூ.14.50 வழங்க பரிந்துரை

 

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 81 சதவீதம் அதிகரிப்பு… இறுதி டிவிடெண்ட் ரூ.14.50 வழங்க பரிந்துரை

2021 மார்ச் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.870 கோடி ஈட்டியுள்ளது.

அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.870 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 81.1 சதவீதம் அதிகமாகும்.

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 81 சதவீதம் அதிகரிப்பு… இறுதி டிவிடெண்ட் ரூ.14.50 வழங்க பரிந்துரை
ஏசியன் பெயிண்ட்ஸ்

2021 மார்ச் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.6,651.4 கோடியாக உள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 43.5 சதவீதம் அதிகமாகும். 2021 மார்ச் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை அளவு அடிப்படையில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 81 சதவீதம் அதிகரிப்பு… இறுதி டிவிடெண்ட் ரூ.14.50 வழங்க பரிந்துரை
ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.14.50 வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த புதன்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.02 சதவீதம் சரிந்து ரூ.2,556.10ஆக குறைந்தது.