கொரோனாவுக்காக தன் பெயரை மாற்றிக்கொண்டார் அஸ்வின்!

 

கொரோனாவுக்காக தன் பெயரை மாற்றிக்கொண்டார் அஸ்வின்!

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு போட்டால் பொருளாதாரம் பயங்கரமாக அடிவாங்கும் என்பதால் கட்டுப்பாடுகள் மட்டுமே அமல்படுத்தப்படுகின்றன. முன்னராவது கொரோனா தடுப்பூசியோ, கொரோனாவை தடுக்கும் வழிமுறைகளோ நம்மிடம் இல்லை. ஆனால் இப்போது இவையனைத்துமே நம்மிடம் உள்ளன.

கொரோனாவுக்காக தன் பெயரை மாற்றிக்கொண்டார் அஸ்வின்!

நாம் பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பட்சத்தில் பெருமளவு பரவலை மக்களாகிய நம்மால் நிச்சயமாகக் கட்டுப்படுத்த முடியும். அதனால் தான் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனாவுக்காக தன் பெயரை மாற்றிக்கொண்டார் அஸ்வின்!

அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் தடுப்பூசிக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை அவசரக்கால பயன்பாட்டுக்காக இந்தியா அனுமதித்திருக்கிறது. இச்சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முறையைக் கையாண்டுள்ளார்.

அதன்படி தனது ட்வீட்டரின் பெயரை மாற்றியிருக்கிறார். முன்பு Ashwin என்று இருந்தது. தற்போது Follow safety protocols! Take your vaccine என்று வித்தியாசமாக மாற்றி எழுதியிருக்கிறார். அதாவது மக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தும் விதமாக பெயரை மாற்றியிருக்கிறார். தவிர, தனது பக்கத்தில் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிறார்.