‘புஜாரா மட்டும் இத செஞ்சிட்டா ஒரு பக்க மீசைய எடுத்திடுறேன்’ – அஸ்வின் ஓபன் சேலஞ்!

 

‘புஜாரா மட்டும் இத செஞ்சிட்டா ஒரு பக்க மீசைய எடுத்திடுறேன்’ – அஸ்வின் ஓபன் சேலஞ்!

கிரிக்கெட் வீரர்களுக்கிடையே சிறு, சிறு சீண்டல்கள் இருக்கும். டிரெஸ்ஸிங் ரூம் அரட்டைகள், கிண்டல்கள் என மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் அனைத்தும் கிரிக்கெட்டில் உண்டு. நமக்கு ஆட்டத்தை மட்டும் காண்பிப்பதால், இவை குறித்து நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேர்காணல்களில் வீரர்களே சொன்னால் தான் தெரியும்.

அவ்வாறான ஒரு நிகழ்வில் தான் அஸ்வின் இந்திய சுவர் புஜாராவுக்கு ஒரு பயங்கரமான சவாலை விடுத்திருக்கிறார். அஸ்வினின் யூடியூப் சானலில் வெளியிடப்பட்டுள்ள பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் அஸ்வின் உரையாடிய வீடியோவில் தான் சுவாரசியமான சவாலை விடுத்திருக்கிறார்.

‘புஜாரா மட்டும் இத செஞ்சிட்டா ஒரு பக்க மீசைய எடுத்திடுறேன்’ – அஸ்வின் ஓபன் சேலஞ்!

“நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொயின் அலி உள்பட இங்கிலாந்தின் வேறு எந்த சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை புஜாரா ஆடும்போது, டவுன் தி டிராக் இறங்கிவந்து தலைக்கு மேல் பந்தை தூக்கி அடித்துவிட்டால், என் ஒருபக்க மீசையை மழித்துக் கொள்கிறேன்” என அஸ்வின் கூறியிருக்கிறார்.

டெஸ்டில் இதுவரை ஒருமுறை கூட சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை புஜாரா தூக்கி அடித்ததில்லை என்பது கவனித்தக்கது. அதேபோல, தற்போது நடந்துமுடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கூட நாதன் லயனை அவர் எதிர்கொண்ட விதம் அனைவரும் ஹார்ட் அட்டாக்கை வரவழைத்தது.

‘புஜாரா மட்டும் இத செஞ்சிட்டா ஒரு பக்க மீசைய எடுத்திடுறேன்’ – அஸ்வின் ஓபன் சேலஞ்!

லயனை மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் கிரிஸுக்குள் நின்று கிளீனாக விளையாட, புஜாரா மட்டும் இறங்கி வந்து டிபென்ஸ் ஆடினார். இதனால் பந்து ஒவ்வொரு முறையும் பேடில் பட்டு மேலேறியது.

இதனையும் குறிப்பிட்டு பேசிய அஸ்வின், “லயன் பந்தை புஜாரா ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளும்போது எனக்கு ஹார்ட் பீட் எகிறியது. பந்து பேடில் பட்டதா, பேட்டில் பட்டதா என்றே தெரியவில்லை. எனினும், புஜாரா லயனுக்கு எதிராக 50+ ஆவரேஜ் வைத்திருக்கிறார். லயனை எதிர்கொள்ள அவர் தனியாக பிளான் வைத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

‘புஜாரா மட்டும் இத செஞ்சிட்டா ஒரு பக்க மீசைய எடுத்திடுறேன்’ – அஸ்வின் ஓபன் சேலஞ்!

அஸ்வினின் சேலஞ்சுக்கு பதிலளித்த விக்ரம் ரத்தோர், “நீங்கள் விடுத்திருப்பது நல்ல சவால் தான். அந்தச் சவாலை புஜாரா ஏற்பாரா என்று பார்ப்போம். எனக்கு தெரிந்து அவர் ஏற்க மாட்டார். நான் ஒவ்வொரு முறையும் ஸ்பின்னர்களின் தலைக்கு மேல் பந்தை தூக்கி அடிக்க அறிவுரை கூறினாலும், அதற்கு எதாவது நல்ல காரணம் சொல்லி என்னை மடக்கிவிடுவார் புஜாரா.

எனக்கு அணியில் மிகப் பிடித்த வீரர்களில் அவரும் ஒருவர். அவரின் பேட்டிங் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். பார்டர்-கவாஸ்கர் டிராபியை வெல்வதற்கு, உடம்பில் அடி வாங்கி டிபென்ஸ் ஆடிய புஜாராவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது” என்று முடித்துக்கொண்டார்.