“முதலில் படுக்கலாம் ,அப்புறம் படிக்கலாம்” -கல்வி ஆஷ்ரமத்தில் 10 சிறுவர்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..

ஆஷ்ரமத்தில் அநியாயம் நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது .ஏற்கனவே நித்யானந்தா ஆசிரமத்தின் மீது ஏராளமான பாலியல் மற்றும் ஆள்கடத்தல் புகார் வந்து வழக்கு நடந்து வரும் நிலையில் ,இப்போது உ.பி .யில் உள்ள ஒரு ஆசிரமத்தின் மீது சிறுவர்களை பாலியல் கொடுமை செய்ததாக புகார் வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள கோடியா மடத்திற்கு திரிபுரா, மிசோரம் மற்றும் அசாமில் இருந்து நிறைய ஏழை சிறுவர்களை கல்வி சொல்லிக்கொடுப்பதாக கூட்டி வந்து அவர்கள் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
முசாஃபர்நகரில் உள்ள கோடியா மடத்தில் ஏராளமான ஏழை சிறுவர்களுக்கு கல்வி இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது .இந்நிலையில் அங்கு மிசோரம் .திரிபுரா ,அஸ்ஸாமிலிருந்து 10க்கும் மேற்பட்ட 7 வயது முதல் 15 வயது சிறுவர்கள் தங்கி படிப்பதற்காக வந்துள்ளனர் .ஆனால் அவர்களுக்கு கல்வி சொல்லி கொடுக்காமல் ,அவர்களை அந்த ஆசிரமத்தின் உரிமையாளர் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் வந்துள்ளது .மேலும் அந்த சிறுவர்களை அடித்து உதைத்து அவர்களை ஆடு மாடுகளை மேய்க்க விட்டுள்ளனர்.

இந்த கொடுமை பற்றி கேள்விப்பட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் அந்த சிறுவர்களை மீட்டனர். பிறகு ஆசிரமத்தின் உரிமையாளர் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ் கைது செய்யப்பட்டார் . இந்த ஆசிரமத்தின் உரிமையாளர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...