“இஎம்ஐ கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்த வங்கி” :தற்கொலை செய்துகொண்ட வீடியோ கலைஞர்!

அந்தப் பட்டியலில் புகைப்பட வீடியோ கலைஞர்கள் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் வீடியோ கலைஞர் அஷ்ரப் அன்சாரி.திருவாரூரை சொந்தஊராக கொண்ட இவர் வீடியோ எடுப்பதும், எடிட்டிங் செய்வது என தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அஷ்ரப் அன்சாரி இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் அஷ்ரப் அன்சாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில்
கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி கடன் தவணை தொகைகளை இந்தப் பேரிடர் காலத்தில் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் கூட தனியார் நிதி நிறுவனங்கள் அதை கடைப்பிடிக்காமல் கடன் தொகையைக் கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள். இதன் காரணமாக தான் அஷ்ரப் அன்சாரி மன உளைச்சலில் தனது வாழ்க்கையை முடித்து கொண்டுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவதை போல தற்போது அந்தப் பட்டியலில் புகைப்பட வீடியோ கலைஞர்கள் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Most Popular

கொரோனா சிகிச்சை: உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு குணமடைந்தார்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுரு உடல் நலம் பெற்றதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனாத் தொற்று ஏற்படவே சென்னை அப்பல்லோ...

‘அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட எல்லா OTT தளங்களும் ஒரே இடத்தில்” ஜியோ டிவி பிளஸ் அறிமுகம்!

வர்த்தகத்துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழும் நிறுவனங்களுள் ஒன்று ஜியோ. இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இந்த முறை கொரோனா பாதிப்பால் மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பேசிய...

“உஷார் !வாட்ஸ் அப்பில் வலம் வரும் அழகிகள்”- ஆசையாக பேசி ஆட்டைய போட்டு ..நிர்வாண வீடியோ மூலம் நிர்மூலமாக்குவார்கள்..

பெங்களூருவில் விட்ஃபீல்டில் வசிக்கும்26 வயது சைமன் ஒரு தனியார் நிறுவன பொறியாளர் .இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்துள்ளார் .கடந்த மாதம் ஒரு பெண் இவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ,தான்...

கொரோனா நிதி விவரங்களை தெரிவிப்பதில் என்ன சிரமம்? நீதிமன்றம் கேள்வி

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்தனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள்,...
Open

ttn

Close