பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி.. கரும் பூஞ்சை நோயை தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு..

பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி.. கரும் பூஞ்சை நோயை தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு..

ராஜஸ்தானில் கரும் பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அந்நோயை தொற்றுநோயாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் பிளாக் பங்கஸ் (கரும் பூஞ்சை) எனப்படும் மியூகோமைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அழுகிய பழங்கள், இறந்த விலங்குகளின் உடல்கள் என்று பல இடங்களில் இந்த கரும் பூஞ்சை காணப்படும். இதுதான் தற்போது மனிதர்களை தாக்க தொடங்கியுள்ளது. கரும் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஆம்போடெரிசன் பி என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.

பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி.. கரும் பூஞ்சை நோயை தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு..
கரும் பூஞ்சை

ராஜஸ்தான் மாநிலத்தில் கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கரும் பூஞ்சை நோயை தொற்றுநோயாக முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் தலைமை சுகாதார செயலாளர் அகில் அரோரா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ராஜஸ்தான் தொற்றுநோய் சட்டம் 2020ன் கீழ் மாநிலத்தில் மியூகோமைகோசிஸ் (கரும் பூஞ்சை) ஒரு தொற்றுநோய் மற்றும் அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி.. கரும் பூஞ்சை நோயை தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு..
லிபோசோமால் ஆம்டோடெரிசின் பி

ராஜஸ்தான மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் கடந்த 14ம் தேதியன்று பாரத் சீரம் அண்ட் தடுப்பூசி லிமிடெட் நிறுவனத்திடம் 2,500 லிபோசோமால் ஆம்டோடெரிசின் பி குப்பிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. கரும் பூஞ்சைக்கு எதிரான சிகிச்சையில் லிபோசோமால் ஆம்டோடெரிசின் பி மருந்து பயன்படுத்தப்படுகிறது.