ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி.. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி பேரம்… பா.ஜ.க. மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி.. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி பேரம்… பா.ஜ.க. மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சி
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை விட அதிக இடங்களை வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதனால் பா.ஜ.க.வால் காங்கிரஸ் ஆட்சியை எளிதாக கவிழ்த்து விட முடியாது. இருந்தாலும் தனது ஆட்சியை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் கூறி வருகிறார்.

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி.. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி பேரம்… பா.ஜ.க. மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு
பா.ஜ.க.

சதிஷ் பூனியா
தற்போதும் அது போன்ற குற்றச்சாட்டை ஒன்றை அவர் கூறியுள்ளார். ஆன்லைனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: பா.ஜ.க.வின் மத்திய தலைமையின் உத்தரவை ஏற்று எங்க அரசை கவிழ்க்கும் விளையாட்டில் சதிஷ் பூனியா அல்லது ராஜேந்திர ரத்தோர் ஈடுபட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுக்க ரூ.25 கோடி வழங்குவதாக அவர்கள் பேசுகின்றனர். எம்.எல்.ஏ.க்களை வாங்க முதலில் அட்வான்ஸாக ரூ.10 கோடியும், ஆட்சியை கவிழ்த்த பிறகு ரூ.15 கோடியும் அவர்கள் வழங்குகின்றனர்.

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி.. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி பேரம்… பா.ஜ.க. மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு
சச்சின் பைலட்

யாரும் முதல்வராக விரும்பவில்லை
கொரோனா வைரஸ் தொற்றுநோயை சாமாளிப்பதற்கு பதிலாக மாநில அரசாங்கத்தை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. காங்கிரஸ் முகத் பாரத் பற்றி பேசினர். ஆனால் இப்போது அவர்கள் காங்கிரஸை பற்றி பயப்படுகிறார்கள். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு நிலையாக உள்ளது மற்றும் தனது ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. சச்சின் பைலட் முதல்வராக விரும்புகிறாரா என்பது குறித்த கேள்விக்கு, யாரும் முதல்வராக விரும்பவில்லை. எங்கள் பக்கத்தில் முதல்வர் பதவிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த 5-7 வேட்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே முதல்வராக இருக்கும் முடியும் என்பதால் மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.