உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி?… அசாதுதீன் ஓவைசி அப்படி சொல்லவே இல்லை.. ஏ.ஐ.எம்.ஐ.எம்.

உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி?… அசாதுதீன் ஓவைசி அப்படி சொல்லவே இல்லை.. ஏ.ஐ.எம்.ஐ.எம்.

உத்தர பிரதேசத்தில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தால் சமாஜ்வாடியுடன் கூட்டணி வைக்க தயார் என்று அசாதுதீன் ஓவைசி கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி மறுத்துள்ளது.

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் துணை முதல்வர் பதவியை முஸ்லிமுக்கு வழங்க வேண்டும், இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேர தயார் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இந்த ஊடக செய்தியை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி மறுத்துள்ளது.

உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி?… அசாதுதீன் ஓவைசி அப்படி சொல்லவே இல்லை.. ஏ.ஐ.எம்.ஐ.எம்.
அசாதுதீன் ஓவைசி

உத்தர பிரதேச ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் சவுகத் அலி கூறுகையில், உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் முஸ்லிம் ஒருவரை துணை முதல்வராக ஆக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாடி கட்சியுடன் ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி வைக்கும் என்று அசாதுதீன் ஓவைசி கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நாங்கள் தெளிவாக மறுக்கிறோம் என்று தெரிவித்தார்.

உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி?… அசாதுதீன் ஓவைசி அப்படி சொல்லவே இல்லை.. ஏ.ஐ.எம்.ஐ.எம்.
சமாஜ்வாடி

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி 5 இடங்களை கைப்பற்றியது. இந்த வெற்றி கொடுத்த தெம்பில் அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தல் அசாதுதீன் ஓவைசிக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.