ராணுவத்திடம் உள்ள வெடிபொருட்களை வைத்து 10 நாள்தான் போர் செய்ய முடியும்… அசாதுதீன் ஓவைசி…

ராணுவத்திடம் உள்ள வெடிபொருட்களை வைத்து 10 நாள்தான் போர் செய்ய முடியும்… அசாதுதீன் ஓவைசி…

நமது ராணுவத்திடம் உள்ள வெடிபொருட்களை வைத்து அதிகபட்சம் 10 நாட்கள் போர் செய்ய முடியும் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சீனாவுடான நடத்தப்பட்ட தூதரக மற்றும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகளால் எந்தவொரு பயனுள்ள தீர்வுகளும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து லடாக் மற்றும் டெப்சாங் பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிட செய்தி ஊடக நபர்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணுவத்திடம் உள்ள வெடிபொருட்களை வைத்து 10 நாள்தான் போர் செய்ய முடியும்… அசாதுதீன் ஓவைசி…
பிரதமர் மோடி

நாடாளுமன்ற உறுப்பினரும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி இது தொடர்பாக கூறியதாவது: டெப்சாங் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஆயிரம் சதுர கி.மீட்டர் நிலத்தை சீன படைகள் கைப்பற்றி உள்ளன. சீனாவிடமிருந்து அந்த நிலத்தை எப்படி அவர்கள் (மத்திய அரசு) திரும்ப பெறப்போகிறார்கள் என்பதை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏன் சொல்லவில்லை. கார்கில் யுத்தம் நடந்த பகுதிக்கு மூத்த செய்தியாளர்களை அனுமதித்து செய்தி வெளியிட்டது போல், லடாக் மற்றும் டெப்சாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஊடக நபர்களை மோடி அரசாங்கம் ஏன் அழைத்து செல்லவில்லை?

ராணுவத்திடம் உள்ள வெடிபொருட்களை வைத்து 10 நாள்தான் போர் செய்ய முடியும்… அசாதுதீன் ஓவைசி…
ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி ஏன் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை. நமது வீரர்கள் இந்த பகுதியில் நம்மால் ரோந்தில் ஈடுபடமுடியாது. படைகள் பணம் பெறவில்லை. 40 நாள் கடுமையான யுத்தத்துக்கு நம்மிடம் போதுமான வெடிபொருட்கள் உள்ளது என்று ராஜ்நாத் சிங்கால் சொல்ல முடியுமா? நம்மிடம் (ராணுவத்திடம்) 10 நாள் போருக்கு தேவையான அளவுக்கே வெடிபொருட்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.