லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்

லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்

லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் எவ்வாறு தங்கள் உயிரை இழந்தார்கள் என்று அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மக்களவையில் இந்தியா-சீனா இடையிலான எல்லை மோதல் தொடர்பாக பேசினார். அது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் டிவிட்டிரில், லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் எவ்வாறு தங்கள் உயிரை இழந்தார்கள் என்று அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஒரு விவாதம் இருக்க வேண்டும். இது குறித்து தினசரி விளக்கங்கள் ஏன் இல்லை?. இன்று (நேற்று) தேர்ந்தெடுக்கப்பட்ட கசிவுகள் (செய்திகள்) மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன.

லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்
அசாதுதீன் ஓவைசி

மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய அறிக்கை பலவீனமான மற்றும் போதுமானதாக இல்லை. நீங்கள இரு தரப்பு ராணுவ பேச்சுவார்த்தை குறித்து பேசுகிறீர்கள். ராணுவத்துக்கு அரசாங்கம் என்ன அரசியல் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது? அரசியல் தலைமை ஏன் இந்த செயல்முறையின் உரிமையை எடுக்கவில்லை?

லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்
ராஜ்நாத் சிங்

ராணுவத்தை ஏன் பினாமியாக மாற்ற வேண்டும்?. இந்த செயல்முறை ஏன் ஆயுதப்படைகள் மீது தள்ளப்படுகிறது? இராஜதந்திரத்தில் ஈடுபடுவது அவர்கள் வேலை இல்லை. அது உங்கள் வேலை. இரு தரப்பு பிரச்சினையில் இந்தியா ரஷ்யாவின் மத்தியஸ்தத்தை ஏன் ஏற்றுக்கொண்டது. நீங்கள் அதை செய்ததிலிருந்து, மற்ற அண்டை நாடுகளுடனா பிரச்சினைகளுக்கும் நீங்கள் மத்தியஸ்தத்தை ஏற்று கொள்வீர்களா? நீங்கள் இந்த நிலையில் இருந்து பின்வாங்கி, லடாக்கில் சீனாவிற்கு நமது பிராந்தியத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளீர்களா? என இவ்வாறு அவர் பதிவு செய்து இருந்தார்.