மதுரா மசூதி விவகாரம்… மற்றொரு வன்முறை பிரச்சாரம் ஆரம்பிக்கக்கூடும்… அசாதுதீன் ஓவைசி எச்சரிக்கை..

மதுரா மசூதி விவகாரம்… மற்றொரு வன்முறை பிரச்சாரம் ஆரம்பிக்கக்கூடும்… அசாதுதீன் ஓவைசி எச்சரிக்கை..

மதுராவில் மசூதியை அகற்றக்கோரிய மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதை குறிப்பிட்டு, சங் அமைப்பு இந்த விவகாரத்தில் மற்றொரு வன்முறை பிரச்சாரத்தை ஆரம்பிக்கக்கூடும் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ராம்ஜென்மபூமி-பாபர் மசூதி நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து ஒரு ஆண்டுகள் ஆகாத நிலையில், மற்றொரு நில பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. மதுராவில் கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்ற உத்தரவிடக்கோரி மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் விஷ்ணு ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. நவம்பர் 18ம் தேதியன்று இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் உத்தரவிட்டுள்ளது.

மதுரா மசூதி விவகாரம்… மற்றொரு வன்முறை பிரச்சாரம் ஆரம்பிக்கக்கூடும்… அசாதுதீன் ஓவைசி எச்சரிக்கை..
மதுரா மசூதி, கோயில்

மதுரா மசூதி விவகாரத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) ஏ.ஐ.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில், அஞ்சப்பட்டது நிஜமாகியுள்ளது.பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பு சங்க் பரிவார் தீர்மானத்தை பலப்படுத்தியுள்ளது. நினைவில் கொள்ளுங்கள்,

மதுரா மசூதி விவகாரம்… மற்றொரு வன்முறை பிரச்சாரம் ஆரம்பிக்கக்கூடும்… அசாதுதீன் ஓவைசி எச்சரிக்கை..
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்

நாம் என்னும் எழுந்திருக்கவில்லை என்றால், சங்கம் இந்த விவகாரத்தில் மற்றொரு வன்முறை பிரச்சாரத்தை ஆரம்பிக்கக்கூடும். காங்கிரசும் அந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும். மதுராவின் மசூதி மீதான வழக்கை மதுரா மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். வடிவமைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.