லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றி அரசியலமைப்பை கேலி செய்யும் பா.ஜ.க அரசுகள்.. அசாதுதீன் ஓவைசி

லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றி அரசியலமைப்பை கேலி செய்யும் பா.ஜ.க அரசுகள்.. அசாதுதீன் ஓவைசி

கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றி அரசியலமைப்பை பா.ஜ.க. மாநில அரசுகள் கேலி செய்கின்றன என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை வேறொரு மதத்தை சேர்ந்த நபர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த பிறகு அந்த பெண்ணை கட்டாயம் மதமாற்றம் செய்வதை லவ் ஜிஹாத் என்று சில இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. சமீபகாலமாக லவ் ஜிஹாத் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் சட்டங்களை இயற்றி வருகின்றன.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றி அரசியலமைப்பை கேலி செய்யும் பா.ஜ.க அரசுகள்.. அசாதுதீன் ஓவைசி
லவ் ஜிஹாத்

உத்தர பிரதேசத்தை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேச அமைச்சரவை கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் தர்ம ஸ்வதந்தரதா (மத சுதந்திரம்) அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி இது தொடர்பாக கூறியதாவது: அரசியலமைப்பில் எங்கும் லவ் ஜிஹாத் குறித்து விளக்கம் இல்லை. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் இந்த சட்டங்கள் வாயிலாக அரசியலமைப்பை கேலி செய்கின்றன.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றி அரசியலமைப்பை கேலி செய்யும் பா.ஜ.க அரசுகள்.. அசாதுதீன் ஓவைசி
பா.ஜ.க.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சட்டத்தை உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பில் பிரிவு 21, 14 மற்றும் 25ன்கீழ், எந்தவொரு இந்திய குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த அரசாங்கத்திற்கும் எந்த பங்கும் இல்லை என்று நீதிமன்றங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதில் பா.ஜ.க. தெளிவாக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.