சீனாவின் பெயரை சொல்ல தயங்குவது ஏன்? பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி

 

சீனாவின் பெயரை சொல்ல தயங்குவது ஏன்? பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் லடாக்கில் உள்ள லேக் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். இது தொடர்பாக AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில் தொடர்ச்சியான பதிவுகளில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ஒரு டிவிட்டில், பிரதமர் நீங்க நமது வீரர்கள் அதேபோல் காயம் அடைந்த வீரர்களையும் சந்தித்தது நன்று. இந்த சைகை வீரர்களின் உந்துதலை நிச்சியமாக அதிகரிக்கும் என பதிவு செய்து இருந்தார். மேலும் அந்த டிவிட்டில், யாரும் நுழையவில்லை மற்றும் நம் நாட்டில் யாரும் இல்லை என மோடி பேசிய பகுதியை ஷேர் செய்து, இது நினைவுசின்ன முட்டாள்தனமானது என பதிவு செய்து இருந்தார்.

சீனாவின் பெயரை சொல்ல தயங்குவது ஏன்? பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி

மற்றொரு டிவிட்டில், மோடி சிரிப்பை பதில் என்கிறார் ஆனால் யாருக்கு? சீனாவின் பெயரை ஏன் சொல்ல தயங்குகிறார்? இன்றைய (நேற்று முன்தினம்) லேக் நிகழ்ச்சி, நமது எதிரி (சீனா) நுழைந்து விட்டான் என்பதை நிரூபணம் செய்துள்ளது. தற்போதைய யுத்த விரய இருப்புகளை வைத்து 12 நாட்களுக்கு மட்டுமே முழு அளவிலான போரை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது காவலாளிக்கு தெரியுமா? என பதிவு செய்துள்ளார்.

சீனாவின் பெயரை சொல்ல தயங்குவது ஏன்? பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி

தனது கடைசி டிவிட்டில், கல்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங் த்சோ அல்லது டெப்சாங் என எதுவாக இருந்தாலும் நிலைமை தீவிரமாக உள்ளது. இதனால்தான் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இதனால் எதிர்க்கட்சி அரசாங்கத்திடமிருந்து பொறுப்புக்கூறலை கோருகிறது மற்றும் இந்திய பிரதேச ஆக்கிரமிப்பு தொடர்பான எங்கள் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்கிறது. இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார்.