ராமர் கோயில் பூமி பூஜைக்கு வாழ்த்து செய்தி.. பிரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிய அசாதுதீன் ஓவைசி

 

ராமர் கோயில் பூமி பூஜைக்கு வாழ்த்து செய்தி.. பிரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிய அசாதுதீன் ஓவைசி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் அதனுடன் ஒரு அறிக்கையும் போஸ்ட் செய்து இருந்தார். பிரியங்கா காந்தியின் வாழ்த்து செய்தி வெளியான அடுத்த சில மணி நேரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு வாழ்த்து செய்தி.. பிரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிய அசாதுதீன் ஓவைசி

அசாதுதீன் ஒவைசி தனது டிவிட்டர் கணக்கில், அவர்கள் இனி நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. இந்துத்துவாவின் இந்த தீவிரவாத சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால் பரவாயில்லை. ஆனால் சகோதரத்துவத்தை பற்றி இந்த வெற்றுப் பேச்சு ஏன்? வெட்கப்பட வேண்டாம். எங்கள் பாபர் மசூதியை இடித்த இயக்கத்திற்கு உங்கள் கட்சி அளித்த பங்களிப்புகளை பற்றி பெருமிதம் கொள்ளுங்கள் என பதிவு செய்து இருந்தார்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு வாழ்த்து செய்தி.. பிரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிய அசாதுதீன் ஓவைசி

முன்னதாக பிரியங்கா காந்தி டிவிட்டரில், எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராம் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் ஒவ்வொருவரிடமும் உள்ளார். ராமர் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். ராமர் மற்றும் தாய் சீதையின் செய்தி மற்றும அருளால், ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழா, தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார சபைக்கான ஒரு சந்தர்ப்பமாக மாற வேண்டும் என இந்தியில் பதிவு செய்து இருந்தார். மேலும் அறிக்கையில் ஜெய் ஸ்ரீராம் ராம் என முடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.