மேற்கு வங்கத்தில் ஆர்வமாக வந்து வாக்களித்த வாக்காளர்கள்.. 5ம் கட்ட தேர்தலில் 78.36 சதவீதம் வாக்குப்பதிவு..

மேற்கு வங்கத்தில் ஆர்வமாக வந்து வாக்களித்த வாக்காளர்கள்.. 5ம் கட்ட தேர்தலில் 78.36 சதவீதம் வாக்குப்பதிவு..

மேற்கு வங்கத்தில் நேற்று 5ம் கட்டமாக 45 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் 78.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 27 (30 தொகுதிகள்), ஏப்ரல் 1 (30 தொகுதிகள்), ஏப்ரல் 6 (31 தொகுதிகள்), ஏப்ரல் 10 (44 தொகுதிகள்) ஆகிய தேதிகளில் முதல் 4 கட்ட தேர்தல்கள் நடைபெற்றது. இந்நிலையில் 5ம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் ஆர்வமாக வந்து வாக்களித்த வாக்காளர்கள்.. 5ம் கட்ட தேர்தலில் 78.36 சதவீதம் வாக்குப்பதிவு..
தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கலிம்பொங்,டார்ஜிலிங், நாடியா, நார்த் 24 பர்கான்ஸ் மற்றும் புர்பா பர்தமான் ஆகிய 6 மாவட்டங்களின் 45 தொகுதிகளில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த 45 தொகுதிகளில் மொத்தம் 319 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 38 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். 45 தொகுதிகளில் 15,789 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

மேற்கு வங்கத்தில் ஆர்வமாக வந்து வாக்களித்த வாக்காளர்கள்.. 5ம் கட்ட தேர்தலில் 78.36 சதவீதம் வாக்குப்பதிவு..
வாக்காளர்கள்

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 4ம் கட்ட தேர்தலின்போது நடந்தது போன்று எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து இருந்தது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து சென்றனர். 5ம் கட்ட தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் (மாலை 6.30 மணி நிலவரப்படி) 78.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.