வேகம் எடுக்கும் கொரோனா.. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை

 

வேகம் எடுக்கும் கொரோனா.. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆலைகளில் உற்பத்தி தற்காலிக நிறுத்தம், வேலை நாட்கள் குறைப்பு, உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக வாகன துறைக்கு பெரிய அடி விழ தொடங்கியுள்ளது. ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பல பகுதிகளில் வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை நிலவரம் மோசமாக உள்ளது.

வேகம் எடுக்கும் கொரோனா.. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை
அசோக் லேலண்ட் ஆலை

விற்பனை குறைந்ததால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு, வேலை நாட்கள் குறைப்பு, ஆலைகளை தற்காலிகமாக மூடல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த மாதத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்தன் காரணமாக சர்வதேச அளவில் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது அனைத்து தயாரிப்பு ஆலைகளிலும் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியது. அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஆலைகளில் செயல்பாட்டை குறைத்துள்ளது. இந்த மாதத்தில் 7 முதல் 15 தினங்களே அந்த ஆலைகளில் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனமும் இந்த மாதத்தில் தனது உற்பத்தியை பாதியாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகம் எடுக்கும் கொரோனா.. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை
ஆர்.சி.பார்கவா

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சிக்கல் விற்பனை பக்கம் உள்ளது. ஏனென்றால் பல மாநிலங்களில் பகுதி ஊரடங்கு மற்றும் ஊரடங்கு உள்ளதால் கார்களை விற்பனை செய்யும் டீலர்கள் தங்களது நிறுவனத்தை மூடப்பட வேண்டும். தற்போது பாதி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.