5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 60 சதவீதத்தை வீணடித்த எதிர்க்கட்சிகள்.. புள்ளிவிவர தகவல்

5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 60 சதவீதத்தை வீணடித்த எதிர்க்கட்சிகள்.. புள்ளிவிவர தகவல்

கடந்த 5 ஆண்டகளில் நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட கேள்வி நேரத்தில் 60 சதவீதத்தை எதிர்கட்சிகள் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற புள்ளிவிவரம் கூறுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் 10 தினங்களில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்றதற்கு, பா.ஜ.க. அரசு தங்களை பேச விடாமல் செய்ய முயற்சி செய்கிறது என எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி குற்றம் சாட்டின. கேள்வி நேரத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தல் எதிர்க்கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 60 சதவீதத்தை வீணடித்த எதிர்க்கட்சிகள்.. புள்ளிவிவர தகவல்
பா.ஜ.க.

முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற பதிவுகளின் அடிப்படையில் கேள்வி நேரம் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மாநிலங்களவை மொத்தம் 332 நாட்கள் நடைபெற்றுள்ளது. அதாவது 332 மணி நேரம் கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 133 மணி நேரம் 17 நிமிடங்கள் மட்டுமே எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி உள்ளன. கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 40 சதவீதத்தை மட்டுமே எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் பயன்படுத்தியுள்ளன.

5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 60 சதவீதத்தை வீணடித்த எதிர்க்கட்சிகள்.. புள்ளிவிவர தகவல்
நாடாளுமன்றம்

எஞ்சிய 60 சதவீதம் இடையூறுகள் மற்றும் கட்டாய ஒத்திவைப்புகள் என வீணடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் கேள்வி நேரம் 50 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கடந்த 8 கூட்டத்தொடர்களில் மொத்தம் 162 மணி நேரம் கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் 59 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எதிர்கட்சிகளின் இடையூறுகளால் 103 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.