கம்பீரமாக உலா வரும் 674 சிங்கங்கள்…. குஜராத்தில் சிங்கங்கள் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு….

கம்பீரமாக உலா வரும் 674 சிங்கங்கள்…. குஜராத்தில் சிங்கங்கள் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு….

காட்டு ராஜா என நாம் கூறும் சிங்கம் பெரும் பூனை இனத்தை சார்ந்தது. நம் நாட்டில் உள்ள சிங்கம் ஆசிய சிங்கம் என அழைக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் இந்த சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது குஜராத் மாநில விலங்காகும். கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தில் சிங்கங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கம்பீரமாக உலா வரும் 674 சிங்கங்கள்…. குஜராத்தில் சிங்கங்கள் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு….

குஜராத்தில் வன துறை கடந்த 5-6ம் தேதிகளில் நடத்திய ஆய்வின்படி, அந்த மாநிலத்தில் மொத்தம் 674 சிங்கங்கள் உள்ளன. கடந்த மே மாதம் வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் 151 சிங்கங்கள் அதிகரித்துள்ளன. 2015 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, 523 சிங்கங்கள் அந்த மாநிலத்தில் இருந்தன. தற்போதைய சிங்கங்கள் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரத்தை வன துறை இன்னும அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

கம்பீரமாக உலா வரும் 674 சிங்கங்கள்…. குஜராத்தில் சிங்கங்கள் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு….

வன மற்றும் சுற்றுச்சூழல் தலைமை செயலாளர் ராஜீவ் குப்தா கூறுகையில், மத்திய அரசின் ஆதரவோடு மாநில அரசின் பயனுள்ள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முயற்சிகள் காரணமாக சிங்கங்களின் எண்ணிக்கை ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2018ம் ஆண்டில் சிங்கங்களை பாதித்த கோரைன் டிஸ்டெம்பர் வைரஸை (சி.டி.வி.) வனத்துறையால் குறைக்க முடிந்தது