சென்னையிலிருந்து வாறீங்களா…. மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.. பயண கொள்கைகளை கடுமையாக்கிய கர்நாடக அரசு….

சென்னையிலிருந்து வாறீங்களா…. மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.. பயண கொள்கைகளை கடுமையாக்கிய கர்நாடக அரசு….

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களே காரணம் என அம்மாநில அரசு புள்ளிவிவரத்துடன் கூறுகிறது. அதனால் அதனை மறுக்க முடியாது. குறிப்பாக மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா வருபவர்கள் 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என முதலில் உத்தரவு பிறப்பித்தது.

சென்னையிலிருந்து வாறீங்களா…. மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.. பயண கொள்கைகளை கடுமையாக்கிய கர்நாடக அரசு….

கர்நாடகாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அங்கு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நேற்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, மூத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் சிறப்பு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக விவாதித்தார். பின் திருத்தப்பட்ட பயண கொள்கையை எடியூரப்பா அறிவித்தார். இனி சென்னை மற்றும் டெல்லியிலிருந்து வருபவர்களும் மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கு வேண்டும் பயண கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வாறீங்களா…. மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.. பயண கொள்கைகளை கடுமையாக்கிய கர்நாடக அரசு….

சென்னையிலிருந்து கர்நாடகவுக்கு வருபவர்கள் 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்துதலிலும், அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலிலும் இருக்க வேண்டும். அதேசமயம் டெல்லி .இருந்து வருபவர்கள் 3 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலிலும், 11 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலிலும் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு பயண விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. திருத்தப்பட்ட பயண கொள்கை தொடர்பாக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களால் அல்ல. ஆகையால் பயண கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.