Home தமிழகம் கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி…புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!

திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு  திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுவதால் அந்த தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது. அந்த வகையில் திருச்சி மேற்குத் தொகுதியைக் குறித்து அலசல் இதோ!

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!


விஐபி தொகுதியான திருச்சி மேற்கு தொகுதி

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!


திருச்சி மேற்கு சட்டமன்றத்தொகுதியில் சுமார்  1லட்சத்து 29ஆயிரத்து 407 ஆண் வாக்காளர்களும்,1 லட்சத்து 38 ஆயிரத்து 954 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த  வாக்காளர்கள் 18 பேர் உள்ளனர். திருச்சி மாநகராட்சியில்  வார்டு எண்  39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை உள்ளடக்கிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருச்சி மேற்கு தொகுதியில்  2006 ஆம் ஆண்டு திமுகவின் கே.என். நேரு வெற்றிபெற்றார்.2011 ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு மீண்டும் நேருவே வெற்றிவாகை சூடினார். 

கே.என்.நேரு 

kn nehru


கே. என். நேரு திமுகவின்  முதன்மை செயலாளராக உள்ளார். கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த நேரு கடந்த  1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது உணவுத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார் . இதனிடையே 2008 முதல் 2009 வரை  வேளாண்துறை அமைச்சராகவும் நேரு பணியாற்றியுள்ளார்.  தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பக்க பலமாக இருக்கும் கே.என்.நேரு சமீபத்தில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி ஸ்டாலினையே அசர வைத்தார்.


களமாடும்  வேட்பாளர்கள்

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!


அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளரான பத்மநாபன்,  மக்கள் நீதி மய்யம் கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கூட்டணியில் அபுபக்கா் சித்திக் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருச்சி மேற்கு – தொகுதியில் R.அப்துல்லா ஹஸ்ஸான் களம் காண்கிறார்.

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!

அரசியலிலும் திமுகவிலும் அனுபவம் மிக்க வேட்பாளரான கே. என் நேரு ஸ்டாலின் திருச்சி மேற்கு தொகுதியில் களம் இறங்கியுள்ள நிலையில் அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளர் பத்மநாபன் களம் காண்கிறார். கே நேருவுக்கு எதிராக வலுவான போட்டியாளரை நியமிக்காமல் புதுமுக வேட்பாளரைக் களமிறக்கியுள்ளதன் பின்னணியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இருப்பதாக கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

திருச்சியில் தன்னைவிட யாரும் பெரிய ஆளாகக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் வெல்லமண்டி நடராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக உள்ள பத்மநாபனுக்கு திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வாங்கி தந்துள்ளார். 1996 திருச்சி மாநகராட்சியில் 45வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர் இந்த பத்மநாபன். 2016 ஆம் ஆண்டு மீண்டும் கவுன்சிலர் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போது தேர்தல் தள்ளிப்போனது ; இப்படிப்பட்ட அரசியல் வரலாறு கொண்ட இவருக்கு வெல்லமண்டி நடராஜன் சீட்டு வாங்கிக் கொடுத்து இருப்பது கே.என். நேருவை ஜெயிக்க வைக்கத்தான் என்று புலம்புகிறார்கள் அதிமுகவினர்.

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!

கடந்த 40 ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கும் சீனியர் பத்மநாபன், நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாமல் சொற்ப எண்ணிக்கையிலான தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் கே.என் நேரு திருச்சி தொகுதியில் போட்டியிடும் மற்ற கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டி வரும் நிலையில் அவருக்கு சாதகமாகப் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார் அவரது மகன் அருண் .

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!

திமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருக்கும் கே.என்.நேரு சட்டமன்ற தொகுதிக்கு வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.நேரு செய்த தவறுகள் , முக்கிய பதவியிலிருந்தும் தொகுதி பக்கமே வராதது குறித்து நிச்சயம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் . அதனால் அவரை எளிதில் தோற்கடிப்பேன் என்று கூறுகிறார் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் . ஆனால் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் பயணிக்கும் நான், என் மகனை இந்த தொகுதியில் விட்டு விட்டு செல்கிறேன். அவன் உங்களுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பான் என்று சமாளிக்கிறார் நேரு. ஆனால் திமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்தால் நேரு கண்டிப்பாகத் திருச்சி மேற்கு தொகுதி செழிப்பான தொகுதியாக வைத்து இருந்திருப்பார் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடம் ஆணித் தரமாக உள்ளது. இதனால் நேரு மீண்டும் திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெறுவாரா? அல்லது அங்கு தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

கே.என்.நேருவை ஜெயிக்க வைக்க சதி...புலம்பும் அதிமுக தொண்டர்கள்!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

உணவின்றி தவிப்பவர்களின் பசியாற்றும் சகோதரர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர்,...

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல்...

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள...

குணமடைந்த ரங்கசாமி… தேங்காய், பூசணிக்காய் உடைத்து தொண்டர்கள் வரவேற்பு!

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய புதுவை முதல்வர் ரங்கசாமியை தொண்டர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து வரவேற்றனர். புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன்...
- Advertisment -
TopTamilNews