உலகளவில் புகழ்பெற்ற கோவை ஆர்ய வைத்திய பார்மஸி தலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்தார்.!

உலகளவில் புகழ்பெற்ற கோவை ஆர்ய வைத்திய பார்மஸி தலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்தார்.!

உலகெங்கும் கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும் போது கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி நாடுமுழுவதும் உள்ள முக்கிய மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியபோது கோவை ஆர்ய வைத்திய ஃபார்மஸி தலைவர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமாரும் பங்கேற்று பல்வேறு யோசனைகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது நமது வாழ்க்கை முறைமாறி, தேவையற்ற உணவுகளை தவறான நேரத்தில் சாப்பிடுகிறோம். ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் விழித்துக் கிடக்கிறோம்.

உலகளவில் புகழ்பெற்ற கோவை ஆர்ய வைத்திய பார்மஸி தலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்தார்.!

சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் உறங்குகிறோம். எனவே,நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம்.மேலும் கொரோனோவிற்கு ஆயுர் வேத முறையில் சிகிச்சை அளிக்கமுடியும் என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில் காய்ச்சலால் கடந்த சில நாட்களாக அவதி பட்டு வந்த கிருஷ்ணகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் ம௫த்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி சிலமணி நேரம் முன்பு பி.ஆர்.கிருஷ்ணகுமார் உயிரிழந்தார்.இவரது இறப்பு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற கோவை ஆர்ய வைத்திய பார்மஸி தலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்தார்.!

மேலும் பி.ஆர்.கிருஷ்ணகுமார் கோவை அவினாசி லிங்கம் பல்கலை.,யின் வேந்தர் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.ஆயுர்வேத மருத்துவத்தில் உலக அளவில் பிரபலமானவர்.பி.ஆர்.கிருஷ்ணகுமார்.கோவை ஆர்ய வைத்திய ஃபார்மஸி மருத்துவமனையில் ஜனாதிபதி முதல் பிரபல நடிகர்கள் உலக தலைவர்கள் தங்கி சிகிச்சை பெற்று செல்லும் அளவு சிறப்பான சிகிச்சை வழங்கி வரும் நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் என்றால் மிகையில்லை.இவரது இழப்புமருத்துவ துறைக்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.