ஆர்யா- சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது! சந்தோஷத்தில் “மாமா” விஷால்

 

ஆர்யா- சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது! சந்தோஷத்தில் “மாமா” விஷால்

நடிகர், தயாரிப்பாளர் என இரு கோணங்களில் கலக்கிவரும் வளர்ந்துவரும் நடிகரான ஆர்யா, கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆர்யா- சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது! சந்தோஷத்தில் “மாமா” விஷால்

21வயது நிரம்பிய சாயிஷா 38 வயது நிரம்பிய ஆர்யாவுடன் திருமணம் செய்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. கிட்டத்தட்ட 17 வருட வயது வித்தியாசத்தில், ஆர்யாவை திருமணம் செய்த சாயிஷா கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் நடிகை சாயிஷாவுக்கு குழந்தை பிறந்ததை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த பதிவில், “இந்த செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் மாமாவானதில் மகிழ்ச்சி. என் சகோதரர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. படப்பிடிப்புக்கு மத்தியில் எனக்கு அளவிட முடியாத சந்தோஷம். ஆர்யா- சாயிஷா ஜோடிக்கு வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ். ஆர்யா அப்பா என்ற புதிய பொறுப்பை ஏற்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.