டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனாவா? வெளியானது பரிசோதனை முடிவுகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனாவா? வெளியானது பரிசோதனை முடிவுகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. டெல்லியில் 27,654பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 10,664 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் 762 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று முன் தினம் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கெஜ்ரிவால் தன்னைத் தானே சுயமாக தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனாவா? வெளியானது பரிசோதனை முடிவுகள்

இதையடுத்து இன்று மதியம் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஏற்கனவே நீரிழிவு நோய் இருப்பதால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் நிலவியது.இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.