வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண உத்தரவு போன்றது.. அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

 

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண உத்தரவு போன்றது.. அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண உத்தரவு போன்றது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று விதான் சபா (சட்டப்பேரவை) மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் இதர தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கெஜ்ரிவாலுடன் விவசாயிகளின் தலைவர்கள் தீவிரமாக விவாதித்தனர்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண உத்தரவு போன்றது.. அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய தலைவர்களுடன் சந்திப்பு

இந்த சந்திப்புக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண உத்தரவு போன்றவை. இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் ஒரு சில நிறுவனங்களின் கைகளில் இருக்கும். இம்மாதம் 28ம் தேதியன்று மீரட்டில் ஒரு பெரிய விவசாயி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண உத்தரவு போன்றது.. அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் முறையீடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லியின் பல எல்லைகளில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற மற்றும் ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்னும் சில தினங்களில் 3 மாதத்தை தொட உள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து உள்ளதாக தகவல்.