அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு…. டெல்லி எல்லைகளை அவசர அவசரமாக சீல் வைத்த கெஜ்ரிவால்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு…. டெல்லி எல்லைகளை அவசர அவசரமாக சீல் வைத்த கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்க்பபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது: அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து தலைநகர் எல்லைகள் அடுத்த ஒரு வாரத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. குடிமக்களிடம் ஆலோசனைகள் கேட்ட பிறகு எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதுவரை என்னவெல்லாம் அனுமதிபட்டதோ அதை தவிர்த்து பார்பர்ஷாப் மற்றும் சலூன்கள் திறக்கலாம் ஆனால் ஸ்பா தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு…. டெல்லி எல்லைகளை அவசர அவசரமாக சீல் வைத்த கெஜ்ரிவால்

சந்தைகளில் அனைத்து கடைகளையும் திறந்து கொள்ளலாம். ஆட்டோ, இ ரிக்ஷா மற்றும் இதர வாகனங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு நீக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களை தவிர்த்து பொதுமக்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வெளியே நடமாட மத்திய அரசு தடை விதித்துள்ளது அதனை டெல்லி அரசும் அமல்படுத்துகிறது.

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு…. டெல்லி எல்லைகளை அவசர அவசரமாக சீல் வைத்த கெஜ்ரிவால்

நான்கு சக்கர வாகனத்தில் டிரைவரை தவிர்த்து 2 பேரும், ஸ்கூட்டரில் பின் சீட்டில் யாரும் பயணம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. அதனால் நாங்களும் அந்த கட்டுப்பாட்டை நீக்கி விட்டோம். மத்திய அரசு முன்பு தொழிற்சாலை பகுதிகளில் படிப்படியான நேரத்தை விதித்து இருந்தது அதனை நாமும் பின்பற்றினோம். தற்போது அந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற்றது, நாமும் அதனையே செய்கிறோம். டெல்லியில் தற்போது தொழிற்சாலைகள் திறக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.