போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் தீபாவளியில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று உறுதியளிப்போம்… கெஜ்ரிவால்

போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் தீபாவளியில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று உறுதியளிப்போம்… கெஜ்ரிவால்

போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் தீபாவளியில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று உறுதியளிப்போம் என்று டெல்லி மக்களிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.

தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதிகரித்து வரும் காற்றுமாசு காரணமாக ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதித்துள்ளன. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று உறுதியளிப்போம் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் தீபாவளியில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று உறுதியளிப்போம்… கெஜ்ரிவால்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிஜிட்டல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தீபாவளியில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று நாம் உறுதியளிப்போம். சென்ற ஆண்டு கெனாட் பிளேஸின் மத்திய பூங்காவில் டெல்லி அரசு மெகா லைட் மற்றும் ஒலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததால் நாம் அனைவரும் ஒன்றாக தீபாவளியை ஒன்றாக கொண்டாடினோம். இந்த ஆண்டும் தீபாவளியை 2 கோடி மக்களும் ஒன்றாக கொண்டாடுவார்கள்.

போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் தீபாவளியில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று உறுதியளிப்போம்… கெஜ்ரிவால்
லட்சுமி பூஜை

ஆனால் இந்த முறை தீபாவளியில் லட்சுமி பூஜை ஏற்பாடு செய்வோம். தீபாவளியன்று இரவு 7.39 மணி முதல் நேரடியாக ஒளிப்பரப்படும். வெளியே சென்று பட்டாசு வெடிக்கவும், மாசுவை சேர்ப்பதற்கும் பதிலாக மக்கள் தங்கள் வீடுகளில் நேரடியாக பூஜைகளை பார்க்கவும், அதே சடங்குகளை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு குடும்பமும், தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்தால் அது இணக்கமான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்கும். பூஜையில் என்னுடன் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.