ஆக்சிஜன் தொடர்பான உங்க சண்டை முடிந்தால்.. ஏதாவது வேலை செய்யலாமா?.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்

 

ஆக்சிஜன் தொடர்பான உங்க சண்டை முடிந்தால்.. ஏதாவது வேலை செய்யலாமா?.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்

ஆக்சிஜன் தொடர்பான உங்க சண்டை முடிந்தால், ஏதாவது வேலை செய்யலாமா? என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் மிகவும் உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல் 25 முதல் மே 10ம் தேதி வரையிலான காலத்தில் டெல்லி அரசு தனது ஆக்சிஜன் தேவையை நான்கு மடங்காக மிகைப்படுத்தி கூறியதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும் டெல்லிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் வழங்குவது நோய் பாதிப்பு அதிகமாக உள்ள 12 மாநிலங்களுக்கான ஆக்சிஜன் வழங்குவதில் நெருக்கடியை தூண்டக்கூடும் என்று தணிக்கை குழு கூறியிருந்தது.

ஆக்சிஜன் தொடர்பான உங்க சண்டை முடிந்தால்.. ஏதாவது வேலை செய்யலாமா?.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

டெல்லியின் ஆக்சிஜன் தேவையை உயர்த்திகாட்டியதாக தணிக்கை குழு கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வும், காங்கிரசும் கோரிக்கை விடுத்தன. இதனையடுக்குது கடந்த வெள்ளிக்கிழமையன்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், எனது குற்றம்- எனது 2 கோடி மக்களின் சுவாசத்திற்காக போராடினேன். நீ்ங்கள் ஒரு தேர்தல் பேரணியில் ஈடுபட்டபோது, இரவு முழுவதும் நான் ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்தேன், நோன் போராடினேன். மக்களுக்கு ஆக்சிஜன் வழங்குமாறு கெஞ்சினேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்களை பொய்யர்கள் என்று அழைக்காதீர்கள். அவர்கள் மிகவும் மோசமாக உணர்கிறார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

ஆக்சிஜன் தொடர்பான உங்க சண்டை முடிந்தால்.. ஏதாவது வேலை செய்யலாமா?.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்
பா.ஜ.க., காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில் நேற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், ஆக்சிஜன் தொடர்பான உங்கள் சண்டை முடிந்தால், ஏதாவது வேலை செய்யலாமா? மூன்றாவது அலையில் யாருக்கும் ஆக்சிஜன் இல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவோம். இரண்டாவது அலையில் மக்கள் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையை சந்தித்தனர். தற்போது இது மூன்றாவது அலையில் நடக்கக்கூடாது. நாம் நம்மிடையே சண்டையிட்டால் கொரோனா வெல்லும். நாம் ஒன்றாக போராடினால் நாடு வெல்லும் என்று பதிவு செய்து இருந்தார்.