kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


அருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்! தொடர்ந்து மவுனம் சாதிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை...

Loading...

பா.ஜ. தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளை ஜெட்லியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அப்போதும் ஜெட்லியின் உடல் நிலை குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அருண் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் கவலைகிடமாக இருந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அருண் ஜெட்லி உடல் நிலை குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் நீண்ட நாட்களாக மவுனமாக இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.