ஆருத்ரா தரிசனம்- ராமநாதசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

ஆருத்ரா தரிசனம்- ராமநாதசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

ராமநாதபுரம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்,

ஆருத்ரா தரிசனம்- ராமநாதசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில், இன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன.

ஆருத்ரா தரிசனம்- ராமநாதசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

பின்னர், ருத்ராட்ச மண்டபத்தில் அமைந்துள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், கோவில் யானை ராமலட்சுமிக்கு கஜ பூஜையும் நடத்தப்பட்டது. இறுதியாக மாணிக்கவாசகர் எழுந்தருளிய சபாபதி சபை முன் அமைந்துள்ள 7 திறைகளும் திறக்கப்பட்டு, நடராஜருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.