“பங்களாவில் திருடியே பல பங்களா வாங்கிட்டியே..” -ஆட்டைய போட்டே ஆடம்பரமாக வாழ்ந்த திருடன் .

 

“பங்களாவில் திருடியே பல பங்களா வாங்கிட்டியே..” -ஆட்டைய போட்டே ஆடம்பரமாக வாழ்ந்த திருடன் .

பல ஊர்களுக்கு விமானத்தில் பறந்தும் ,ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியும் கொள்ளையடித்தே பல கோடிகளை சம்பாதித்த ஒரு ஆடம்பர திருடனை போலீசார் பிடித்துள்ளார்கள் .

“பங்களாவில் திருடியே பல பங்களா வாங்கிட்டியே..” -ஆட்டைய போட்டே ஆடம்பரமாக வாழ்ந்த திருடன் .

குஜராத் மாநிலம் வதேரா பகுதியை சேர்ந்த 20 வயதான நவ்கன் தல்படா என்ற வாலிபர் பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் .அதற்கு மேல் இவருக்கு படிப்பு வராததாலும் ,ஆடம்பரமாக அவர் வாழ ஆசைப்பட்டதாலும் கொள்ளையடிக்கும் தொழிலை தேர்ந்தெடுத்தார் .

அதனால் அவர் குஜராத்திலிருந்து சென்னை ,பெங்களூரு ,ஹைதராபாத் போன்ற பகுதிகளில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி ,அந்த பகுதியில் உள்ள பல பங்களாக்களில் புகுந்து கொள்ளையடிப்பார் .இப்படி அவர் கொள்ளையடித்தே பல பங்களாக்களை  விலைக்கு வாங்கியுள்ளார் .பல ஆடம்பர கார்களையும் வாங்கியுள்ளார் .அவர் மீது போலீசில் 22 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள்  உள்ளன .ஆனால் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல் தொடர்ந்து விமானத்தில் ஊர் ஊராக பறந்து பல ஹோட்டல்களில் தங்கி கொள்ளையடித்து வந்தார் .சமீபத்தில் கெடாவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்து சென்றபோது அவர் போலீசின் வளையத்தில் சிக்கினார் .மேலும் அவர் நதியாட் பகுதியில் நடந்த கொள்ளை தொடர்பாக அந்த பகுதி போலீசாரால்  கைது செய்யப்பட்டார் .அப்போது அவரிடம் நடந்த விசாரணையில் அவர் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ள பல பங்களாக்களில் புகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார் .மேலும் அவரை போலீசார் பிடிக்காமலிருக்கு செல்போனை பயன்படுத்தாமல் இருந்ததுதான் காரணம் என்றார் .எப்போதுமே செல்போனை வீட்டிலேதான் வைத்திருப்பேன் என்றார் .போலீசார் அவர் மீது மேலும் ஒரு வழக்கை  பதிவு செய்து ரிமாண்டில் வைத்துள்ளார்கள் 

“பங்களாவில் திருடியே பல பங்களா வாங்கிட்டியே..” -ஆட்டைய போட்டே ஆடம்பரமாக வாழ்ந்த திருடன் .