“யாரையோ திருப்திப்படுத்த நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” : திமுக ஆர். எஸ். பாரதி

“யாரையோ திருப்திப்படுத்த நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” : திமுக ஆர். எஸ். பாரதி

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர். எஸ். பாரதி இன்று அதிகாலை சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

“யாரையோ திருப்திப்படுத்த நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” : திமுக ஆர். எஸ். பாரதி

அங்கிருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லபட்ட அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவரை ஜாமீனில் எடுக்க திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“யாரையோ திருப்திப்படுத்த நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” : திமுக ஆர். எஸ். பாரதி

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆர். எஸ். பாரதி, “பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கிய விவகாரத்தில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மீது புகார் அளித்திருந்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.