அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம்!

 

அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம்!

அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்தப்படி மதுரையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பிஇ மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஏப்ரல் மாதம் அரியர் கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் தேர்ச்சியின்றி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பொறியியல் மாணவர்கள் தேர்ச்சி ஏற்க முடியாது என இந்திய தொழில்நுட்ப கழகம் கூறியுள்ளது. இதனால் அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த அரியர் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் அரியர் மாணவர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் காதில் பூ வைத்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியர் தேர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கவும், தேர்ச்சி மதிப்பெண் பட்டியலை உடனே வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மாணவர்கள் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்ததுடன் வாழ்வு கொடுத்த வள்ளல் என்ற வாசகங்களுடன் ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டியது குறிப்பிடத்தக்கது