அரியர்ஸ் தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

 

அரியர்ஸ் தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு பிஇ மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஏப்ரல் மாதம் அரியர் கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் தேர்ச்சியின்றி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. குறிப்பாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பொறியியல் மாணவர்கள் தேர்ச்சியை ஏற்க முடியாது என இந்திய தொழில்நுட்ப கழகம் தெரிவித்தது.

அரியர்ஸ் தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

இதையடுத்து அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அரியர்ஸ் தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

இந்நிலையில் அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் இந்த வழக்கில் ஏஐசிடிஇ, யுஜிசிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு,
மத்திய அரசும் செப்டம்பர் 30-க்குள் பதில்தர உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.