அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியதால், இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகளை தவிர பிற ஆண்டுகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

இந்த நிலையில், அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது, கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப் பாடங்களுக்கான தேர்வெழுத விலக்கு அளிக்கப்படுவதாகவும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் வழிகாட்டுதல் படி தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.