அரியர் தேர்வு விவகாரம்: மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக அரசு?

 

அரியர் தேர்வு விவகாரம்: மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக அரசு?

அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு ஏ.ஐ.சி.டி.இ

அரியர் தேர்வு விவகாரம்: மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக அரசு?

எதிர்ப்பு தெரிவித்ததாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார். அதே நேரத்தில் பல்கலைக் கழக மானியக் குழுவிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை, எனவே, அரசு உத்தரவு படி அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் பாஸ் செய்யப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக் கழகம் அறிவித்தது.


சென்னை பல்கலைக்கழகம் கலை, அறிவியல் பாடங்களை மட்டுமே வழங்குகிறது. இங்கு அரியர் வைக்கும் மாணவர்கள் உண்டு என்றாலும் பொறியியல் பாடம் அளவுக்கு அரியர் வைத்தவர்கள் இல்லை. அண்ணா பல்கலைக் கழகத்தில் 20, 25க்கு மேல் என அரியர் வைத்த மாணவர்கள் அதிகம். தமிழக அரசின் அறிவிப்பால் இந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சமூக ஊடகங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பிரசாரமே செய்யப்பட்டது.

அரியர் தேர்வு விவகாரம்: மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக அரசு?


ஏஐசிடிஇ என்பது பொறியியல் கல்லூரிகளை நடத்தும் அமைப்பு. அந்த அமைப்பு என்ன சொல்கிறதோ அதைத்தான் பொறியியல் கல்லூரிகள் பின்பற்ற முடியும் என்ற நிலையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தன்னுடைய உத்தரவுதான் முக்கியம் என்ற வகையில் கூறி வந்தது. தற்போது ஏ.ஐ.சி.டி.இ அனுப்பிய கடிதத்தை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வெளியிட்டுள்ளார். இதனால், மாணவர்கள் மற்றும் ஆளுங்கட்சி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்படி ஒரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி?

அரியர் தேர்வு விவகாரம்: மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக அரசு?


அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்படி ஒரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியர் தேர்வு விவகாரம்: மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக அரசு?


அண்ணா பல்கலைக் கழகம் எதிர்ப்பு தெரிவித்தபோதே உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கொஞ்சம் அமைதி காத்து, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் கடிதம் வெளியாகி மிகப்பெரிய டேமேஜ் ஆவதை தடுத்திருக்கலாம் என்று கல்வியாளர்கள் அ.தி.மு.க-வில் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.