ஓடிடி-யில் படங்கள் வெளியாவதை தடுக்க ஏற்பாடு – அமைச்சர் கடம்பூர் ராஜு

 

ஓடிடி-யில் படங்கள் வெளியாவதை தடுக்க ஏற்பாடு – அமைச்சர் கடம்பூர் ராஜு

ஓடிடியில் படங்கள் வெளியாவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலம் என்பதால் கடந்த 6 மாத காலமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கிடப்பில் உள்ள படங்களை சில நடிகர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஓடிடி-யில் படங்கள் வெளியாவதை தடுக்க ஏற்பாடு – அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘திரையரங்கு மூடப்பட்டு கிடப்பதால் தயாரிப்பாளர்களின் பொருளதாரத்தின் அடிப்படையில் சில படங்கள் மட்டும் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது. இது தற்காலிக ஏற்பாடு என்று நினைக்கிறேன். இது தற்காலிக ஏற்பாடாக இருந்தால் சந்தோஷம் தான்.ஓடிடியில் படங்கள் வெளியாவதை தடுப்பது பற்றி திரைப்படத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓடிடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு வரும் ‘ என்று தெரிவித்துள்ளார்.

ஓடிடி-யில் படங்கள் வெளியாவதை தடுக்க ஏற்பாடு – அமைச்சர் கடம்பூர் ராஜு

திரைப்படங்களை தியேட்டரில் வெளியிடாமல் ஓடிடி வெளியிடுவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படுமாயின் முடங்கி கிடக்கும் திரையுலகம் புத்துயிர் பெறும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.