“எனது மகன் இனி சிறை செல்ல கூடாது; ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுங்கள்” – முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை!

 

“எனது மகன் இனி சிறை செல்ல கூடாது; ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுங்கள்” – முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரட்டை ஆளுள் தண்டனையும் தாண்டியுள்ளதால் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பல ஆண்டுகாலமாக சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதனிடையே அற்புதம்மாள் தமிழ்நாடு அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...  அற்புதம்மாள் நெகிழ்ச்சியுடன் நன்றி!

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தார் அற்புதம்மாள். தற்போது ஸ்டாலினுக்கு மற்றொரு கோரிக்கையும் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “தொடர் ஓட்டம், வரலாற்றில் இல்லா போராட்டம், என பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும். இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாகவேண்டும் என ஒற்றை இலக்கே காரணம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் அவர் பேசிய ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.

“எனது மகன் இனி சிறை செல்ல கூடாது; ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுங்கள்” – முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை!

அந்த வீடியோவில், “30 ஆண்டுகளாக சிறை வாழ்க்கை அனுபவிக்கும் பேரறிவாளன் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனுக்கு சிறு, சிறு மருத்துவம் கிடைத்தாலும், தொடர் மருத்துவம் கிடைப்பது இல்லை. இதனால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று இருப்பதால் அவர் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பேரறிவாளனுக்கு சிறுநீரக சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்காக பரோல் வழங்க அரசுக்கு விண்ணப்பித்தேன். இதனையேற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.

“எனது மகன் இனி சிறை செல்ல கூடாது; ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுங்கள்” – முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை!

ஆனால், பேரறிவாளனுக்கு உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளதால், அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நீண்ட சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது. அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.